கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி அவதார விழா

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி அவதார விழா நடைபெற்றது

Update: 2024-07-23 00:55 GMT
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை் அருகே கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி அவதரித்த தினத்தை முன்னிட்டு நேற்று காலை 7:15 மணி முதல் 10:00 மணிக்குள் அவதார இல்லம் பட்டமான் கருப்பனேந்தல் மடம் தவச்சாலையில் அமைந்துள்ள சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி ஜீவ ஒடுக்கமான இடத்தில் பூஜைகள் நடத்தப்பட்டது. முன்னதாக அதிகாலை சுவாமிக்கு 18 வகையானபொருட்களால் திருமஞ்சனம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து அபிஷேக, ஆராதனைகளும், அன்னதானமும் நடைபெற்றது. இரவு 8:00 மணிக்கு பூப்பல்லக்கில்சுவாமி வீதி உலா சென்றார்.ஏற்பாடுகளை கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் அவதார இல்ல பரம்பரை தர்மகர்த்தா பரமசிவம் மற்றும் நிர்வாகிகள் சேகர், தண்டாயுதபாணி மற்றும் கட்டிக்குளம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Similar News