தொடர்ந்து பெய்த பருவ மழையால் இந்த ஆண்டு மகசூல் அதிகரித்துள்ளதால் நெல் விவசாயிகள் மகிழ்ச்சி

விவசாயிகள்

Update: 2024-07-23 05:07 GMT
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சுற்றி உள்ள கீழ வடகரை பகுதியில் 5000த்திற்க்கும் மேற்பட்ட ஏக்கரில் கோவை 43 மற்றும் 45, ஆடுதுறை 39, 45, என்.எல்.ஆர், ஐ.ஆர் 20, நெல்லூர் 449, உள்ளிட்ட ரகங்களை இரண்டாம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் மேற்கொண்டனர். இந்நிலையில் கோடை மழையும் தென்மேற்கு பருவமழையும் தொடர்ந்து பெய்ததால் பெரியகுளம், ஆண்டிகுளம், பூலாங்குளம் உள்ளிட்ட பகுதியில் 5000த்திற்கும் மேற்படட ஏக்கரில் நடவு செய்யப்பட்ட இரண்டாம் போக நெல் சாகுபடி நல்ல விளைச்சல் அடைந்துள்ளது. தற்பொழுது தென்மேற்கு பருவமழை அவ்வப்பொழுது பெய்து வருவதால் அறுவடை பணிகளுக்கு தடங்கல் ஏற்படும் நிலை உள்ளதால் விவசாயிகள் நெல் அறுவடை பணிகளில் தீவரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து பெய்த பருவமழையால் இந்த ஆண்டு இரண்டாம் போக சாகுபடியில் ஏக்கருக்கு 30 முதல் 35 மூடை அறுவடையாகி நல்ல விளைச்சல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். மேலும் தங்கள் பகுதியில் அறுவடை பணிகள் துவங்கி உள்ளதால் தமிழக அரசு தற்காளிக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உரிய நேரத்தில் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

Similar News