மின் கட்டணம் மற்றும் அனைத்து வரிகளையும் உயர்த்திய தமிழக அரசை கண்டித்து திருநெல்வேலி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வண்ணார்பேட்டையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.