மின் கட்டண உயர்வை ஏற்படுத்திய திமுக அரசை கண்டித்து தேனியில் அதிமுக கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

Update: 2024-07-23 10:10 GMT
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் தமிழக முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதன் ஒரு பகுதியாக தேனி பங்களாமேடு பகுதியில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்தும் தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, நியாய விலைக் கடைகளில் பாமாயில, பருப்பு ஆகியவை பொதுமக்களுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதை கண்டித்தும் அதிமுக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் கண்டிக்கின்றோம் கண்டிக்கின்றோம் மின் கட்டண உயர்வை ஏற்படுத்திய திமுக அரசை கண்டிக்கிறோம் அத்தியாவசிய விலை உயர்வை ஏற்படுத்திய திமுக அரசை கண்டிக்கிறோம் என்ற கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்டச் செயலாளர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Similar News