கிறித்துவ துண்டு பிரச்சாரம் வழங்கிய கன்னியாகுமரி பெந்தகோஸ்தே சபையினர் விரட்டியடிப்பு
மயிலாடுதுறையில் நரிக்குறவ சமுதாய மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கிய பெந்தகோஸ்து நிர்வாகிகள் விரட்டியடிப்பு:- கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சி நடப்பதாக இந்து முன்னணியினர் காவல் துறையில் புகார்
மயிலாடுதுறையை அடுத்த திருஇந்தளூர் ஊராட்சியில் கடந்த ஒரு வாரமாக பெந்தகோஸ்து நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் பொதுமக்களை சந்தித்து கிறித்தவம் குறித்த துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையடுத்து, இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் சுவாமிநாதன் தலைமையில் அவ்வமைப்பின் நிர்வாகிகள் சென்று பார்த்தபோது, திருவிழந்தூர் ஊராட்சி பல்லவராயன்பேட்டை கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவ சமுதாய மக்களிடமும் பெந்தகோஸ்து சபையை சேர்ந்தவர்கள் துண்டு பிரசுரம் வழங்கிமது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் அவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். மேலும், இதுகுறித்து, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், நீடூர் ஆலங்குடி பகுதியில் பெந்தகோஸ்து கிறிஸ்துவ சபை நடத்திவரும் பாஸ்டர் ஜான்எபினேசர் என்பவரது வழிகாட்டுதலின் பேரில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்டர் தர்மராஜ் என்பவரது தலைமையில் பெந்தகோஸ்து சபையை சேர்ந்தவர்கள் கடந்த ஒருவாரமாக மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மதமாற்ற பிரச்சாரம் செய்து வருவதாகவும், அதனை தடுத்து நிறுத்துமாறும் புகார் அளித்தனர்.