கொள்ளிடம் ஆற்று மணல் திருடுவதில் போட்டா போட்டி பேரூராட்சி மன்ற தலைவர் மீது வழக்கு

கொள்ளிடம் ஆற்றில் சட்டத்திற்கு புறம்பாக டிப்பருடன் கூடிய டிராக்டரில்  மணல் கடத்தலில் ஈடுபட்ட  மணல்மேடு பேரூராட்சி தலைவரின் கணவர் உள்ளிட்ட 5 பேர் மீது மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு. ஒரு எஸ் ஐ உட்பட 3 போலீசார் பணியிட மாற்றம்

Update: 2024-07-24 08:30 GMT
கொள்ளிடம் ஆற்றில் சட்டத்திற்கு புறம்பாக டிப்பருடன் கூடிய டிராக்டரில்  மணல் கடத்தலில் ஈடுபட்ட  மணல்மேடு பேரூராட்சிதலைவரின் கணவர் உள்ளிட்ட 5 பேர் மீது மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு. கடத்தலில் ஈடுபட்ட கல்லூரி மாணவனை எச்சரிக்கை செய்து எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்த காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட இருவர் ஆயூதப்படைக்கு பணியிட மாற்றம். கல்லூரி மாணவனை கைது செய்து மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்   மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மணல்மேடு  காவல் எல்லைக்குட்பட்ட திம்மாபுறம் பகுதியில் இரவு பகலாக 4 லாரிகள்மூலம் பொக்லின் எந்திரங்களைக்கொண்டு கொள்ளிடம் ஆற்றில் மணல்  திருட்டு நடைபெற்று வருகிறது, அதன்மீது மணல்மேடுபோலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில்,   மணல்மேடு பாப்பாகுடி திரௌபதி அம்மன் கோவில் அருகில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் புதிய நபர்கள் டிராக்டரில்மணல் கடத்தப்படுவதாக மணல்மேடு போலீசாருக்கு  தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் உதவி ஆய்வாளர் அகோரம் காவலர்கள் சந்தோஷ் பிரபு, அகஸ்டின் அங்கே சென்றபோது போது டிராக்டர் உடன் கூடிய டிப்பர் லாரியில்  பேர் மணல் ஏற்றிக் கொண்டிருந்த  3 பேர் தப்பி ஓடிய நிலையில் டிராக்டர் ஓட்டுநரை மடக்கி பிடித்தனர்.  டிப்பரில் ஒரு யூனிட் மணல் ஏற்றப்பட்டிருந்தது. டிராக்டர் ஓட்டுநர் வல்லத்தைச் சேர்ந்த  நிர்மல் (19) கல்லூரி மாணவன் என்றும் டிப்பரில் மணல் ஏற்றியவர்கள் முடிகண்டநல்லூரை சேர்ந்த வீரமணி, காமராஜ் மற்றும் பெயர் தெரியாத நபர் ஒருவர் என்றும் தெரிய வந்தது. மேலும் மணல்மேடு பேரூராட்சி மன்ற தலைவர் கண்மணியின் கணவர் அறிவு வடிவழகன் சொன்னதன் பேரில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் மணலை அள்ளச் சொன்னது தெரியவந்தது. டிராக்டரருடன் கூடிய டிப்பரை பறிமுதல் செய்த போலீசார் கல்லூரி மாணவன் என்பதால் எழுதி வாங்கி கொண்டு எச்சரிக்கை செய்து மாணவன் நிர்மலை வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து இச்சம்பவம் அறிந்த உயர் அதிகாரிகள் நிர்மலை கைது செய்ய உத்தரவிட்டனர். உயரதிகாரிகளின் அனுமதி இல்லாமல் தன்னிச்சையாக முடிவெடுத்ததால் மாவட்ட காவல் கண்காகணிப்பாளர் மீனா உத்தரவின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் அகோரம், காவலர் சந்தோஷ் பிரபு ஆகிய இருவரும் மாவட்ட ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அறிவு வடிவழகன் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக உட்கட்சி சண்டையில் பழிவாங்கப்பட்டதாக ஒரு சாரார் புலம்புகின்றனர்.

Similar News