எடப்பாடி பழனிசாமி என்ற சுயநலவாதி, பதவி வெறியர், துரோக சிந்தனை கொண்டவர்தான் அதிமுக ஒன்றிணைய தடைக்கல்லாக இருக்கிறார் என செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் பேட்டி

டிடிவி தினகரன்

Update: 2024-07-24 12:35 GMT
தேனி பழனிசெட்டிபட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் டி.டி.வி.தினகரன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் கட்சி செயல்பாடு குறித்தும் கட்சிப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது பின்னர் கூட்டம் முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் தேனி மாவட்டத்தில் வீடு எடுத்து தங்க வேண்டும் என்று எனது பல ஆண்டுகள் ஆசை அதற்காக வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் தேனியில் போட்டியிடுவேன் எனக் கூறுவது வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் தேனியில் போட்டியிடுவேன் எனக் கூறுவது தவறு ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, போடியில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதாக வெளியாகும் தகவல் தவறானது எங்கு போட்டியிடுவது என்று தற்போது முடிவை எடுக்கவில்லை. அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என போட்டியிடவில்லை வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே போட்டியிடும் ஆனால் பணநாயகத்தை ஜனநாயகத்தால் வெல்ல முடியவில்லை. இனிவரும் தேர்தலில் எங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். பாஜக, அதிமுக-வை அழிக்கப்பார்க்கிறது என்பதெல்லாம் பொய். ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் என் பின்னே அணி திரள்வார்கள் என்றுதான் அண்ணாமலை கூறினார். எடப்பாடி பழனிசாமி என்ற சுயநலவாதி, பதவி வெறியர், துரோக சிந்தனை கொண்டவர்தான் அதிமுக ஒன்றிணைய தடைக்கல்லாக இருக்கிறார். ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற ஆசையில் சசிகலா சுற்றுப்பயணம் செய்கிறார்கள். விரைவில் அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

Similar News