நாயை கயிறு கட்டி ஊர்வலமாகச் அழைத்து சென்று பேரூராட்சி அலுவலகத்தில் நூதன முறையில் கோரிக்கை வைத்த சிவசேனா கட்சியினர்
கோரிக்கை
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களால் சாலையில் செல்லும் சிறுவர் சிறுமிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தொடர்ந்து பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர் இரவு நேரங்களில் சாலைகளில் நாய்களின் தொல்லை அதிகம் இருப்பதால் பொதுமக்கள் தனியாக நடந்து செல்ல முடியாமல் இருப்பதாகவும் சாலையில் சுற்றித் தெரியும் நாய்களை பேரூராட்சி நிர்வாகம் பிடித்துச் சென்று பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வந்தது இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சுமார் 10க்கும் மேற்பட்டோர் நாய் கடித்ததால் பாதிக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்ற இந்த நிலையில் தேனி மாவட்ட சிவசேனா கட்சியினர் தெருவில் சுற்றி திரியும் நாயை கயிறு கட்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்து நூதன முறையில் கோரிக்கை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் சிவசேனா கட்சியினரிடம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது, தெருக்களில் சுற்றி தெரியும் நாய்களை பேரூராட்சி நிர்வாகம் பிடித்து அதற்கு தடுப்பூசி செலுத்தி பராமரிக்க வேண்டும் என சிவசேனா கட்சியினர் கோரிக்கை வைத்தனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது