மின் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மின்வாரிய அலுவலகத்தில் முன்பு ஆர்ப்பாட்டம்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கு பின்பு மின் கட்டண உயர்வை அமல்படுத்தியதால் பொதுமக்கள் மற்றும் சிறுகுறி தொழில் நிறுவனங்களின் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து தேனி மாவட்டம் பெரியகுளம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உதவி மின் பொறியாளர் அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழக அரசை கண்டித்தும், மின் கட்டண உயர்வை திரும்ப பெறக் கூறியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதானி நிறுவனம் வழங்கும் அதிக கொள்முதல் விலையை குறைத்திட வேண்டும், ஆண்டுதோறும் மின்கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசின் நிபந்தனைக்கு அடிபணியக் கூடாது, தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும், தற்பொழுது உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி கோசமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.