கெங்கவல்லி:தம்மம்பட்டியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்

Update: 2024-07-25 12:30 GMT
கெங்கவல்லி:தம்மம்பட்டியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்சேலம் மாவட்டம் நாகியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் வட்டார தலைமை மருத்துவர் வேலுமணி தலைமை தாங்கினார். தி.மு. க. முன்னாள் எம். எல். ஏ. சின்னதுரை, கெங்கவல்லி ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நாகியம்பட்டி ஊராட்சி தலைவர் முத்துராஜ் குத்துவிளக்கு ஏற்றினார். தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். முகாமில் பொதுமக்களுக்கு காசநோய், காது, மூக்கு, தொண்டை, தோல் நோய், ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இ.சி.ஜி. ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் 833 பேர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். தானிய பெட்டகம், மக்களை தேடி மருத்துவம், ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியன 11 பேருக்கு வழங்கப்பட்டன. பொது மருத்துவம் சம்பந்தமாக 24 பேருக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்குபரிந்துரை செய்யப்பட்டது. சுகாதாரஆய்வாளர் ஜமால் முகமது உள்பட பலர்கலந்து கொண்டனர்

Similar News