கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி.தமிழக கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கிராம மக்கள் அச்சம்.

நிபா வைரஸ்

Update: 2024-07-25 14:59 GMT
தமிழக கேரள எல்லைப் பகுதியில் உள்ள பல்வேறு ஊர்களில் மருத்துவ சோதனை நடைபெற்று வரும் நிலையில் போடி மெட்டு எல்லைப் பகுதிகளில் மருத்துவ சோதனை மையம் அமைக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பு கேரளாவில் பல்வேறு இடங்களில் நிபா வைரஸ் பரவி வருகிறது. ஏற்கனவே 14 வயது சிறுவன் ஒருவர் நிபா வைரஸ் காரணமாக உயிரிழந்த நிலையில் சுமார் 400 க்கும் மேற்பட்ட நபர்கள் நிபா வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் மருத்துவக் குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து கேரளா செல்லும் முக்கிய எல்லைப் பகுதியான போடி மெட்டு மற்றும் முந்தல் பகுதிகளில் இதுவரை எந்த ஒரு மருத்துவக் குழு கண்காணிப்பு மையம் அமைக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. போடிநாயக்கனூரில் இருந்து போடி மெட்டு மலைச்சாலை வழியே நாள்தோறும் சுற்றுலா வாகனங்கள் காய்கறி வாகனங்கள் மற்றும் ஏலத் தோட்டங்கள் தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் பணியாளர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் சென்று வந்து கொண்டுள்ளனர். தமிழகம் மட்டுமன்றி பாண்டிச்சேரி ஆந்திரா கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் போடி மெட்டு மலைச்சாலை வழியாக கேரளா சென்று வந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவ கண்காணிப்பு குழுவினர் நிபா வைரஸ் பரவல் காரணமாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் போடி மட்டும் மலைச் சாலையில் இது வரையிலும் மருத்துவர் குழு நிபா வைரஸ் கண்காணிப்பு மற்றும் ஆய்வு மேற்கொள்ளப்படாத குறித்து பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கோயமுத்தூர் மாவட்டத்தில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் பள்ளி சுற்றுலா கேரளா செல்லக்கூடாது என்று மாவட்ட அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் தென் எல்லை பகுதிகளில் முக்கியமான ஒன்றான போடிமெட்டு பகுதியில் நிபா வைரஸ் பரவல் குறித்து மருத்துவ கண்காணிப்பு நடைபெறாதது குறித்து பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். நாள்தோறும் இடுக்கி மாவட்டம் வழியே கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கான நபர்கள் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் நிலையில் போடி மெட்டு மலைச்சாலையில் நிபா வைரஸ்தமிழகத்தில் பரவாமல் இருப்பதற்காக கண்காணிப்பு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News