ராமநாதபுரம் முதலமைச்சரிடம் மீனவர்கள் கோரிக்கை

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை ராமநாதபுரம் மீனவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி.

Update: 2024-07-26 14:01 GMT
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்களையும் விசைப்படகு மற்றும் நாற்றுப் படகுகளையும் சமீப காலமாக இலங்கை கடற்படை சிறை பிடிப்பதும் அடித்து விரட்டுவதும் தொடர்கதையாக உள்ளது மத்திய மாநில அரசுகளுக்கு மீனவ சங்கத்தின் அமைப்புகள் கோரிக்கையை விடுத்த நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் மீனவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்பு மீனவ சங்கத்தின் நிர்வாகிகளை தமிழ்நாடு முதலமைச்சர் இடம் நேரடியாக அழைத்துச் சென்று கோரிக்கை விடுக்க செய்தார் அதன்படி முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசுகையில் இலங்கையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கையை எடுக்கப்படும் குடும்பங்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் ஏற்கனவே பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் வீதம் வழங்கப்பட்டுள்ளது மீனவர்களுக்கு என்றும் தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும் மத்திய அரசு மீனவர்கள் பிரச்சனைகள் தலையிட மறுக்கிறது ஆகவே உடனடியாக இவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்

Similar News