ராமநாதபுரம் பணிமனை முன்பு சி ஐ டி யு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

50 ஆண்டுகளுக்கு மேலாக ராமநாதபுரத்தில் இயங்கி வந்த எஃப் சி யூனிட்டை தேவகோட்டைக்கு மாற்றியதை கண்டித்தும் மீண்டும் ராமநாதபுரதில் செயல்பட வலியுறுத்தி சி ஐ டி யு ஆர்ப்பாட்டம்.

Update: 2024-07-26 14:06 GMT
ராமநாதபுரத்தில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான எப்சி யூனிட் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தது. கும்பகோணம் மேலாண்மை இயக்குனரின் தன்னிச்சையான போக்கால் தேவகோட்டையில் இயங்குகிற டெப்போவுக்கு மாற்றப்பட்டது. மாற்றப்படுவதாக செய்தி வந்தவுடன் சி ஐ டி யு சங்கம் சார்பில் முதலமைச்சர் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவு, போக்குவரத்து துறை அமைச்சர், போக்குவரத்துறை, கும்பகோணம் மேலாண்மை இயக்குனர் காரைக்குடி பொது மேலாளர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் எப்சி யூனிட் மாற்றக் கூடாது என்ற முறையில் கடிதம் அனுப்பப்பட்டது. மாவட்ட நிர்வாகமும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும், முதலமைச்சர், போக்குவரத்து அமைச்சர் உள்ளிட்ட எந்த துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனாலும் கும்பகோணம் மேலாண்மை இயக்குனரின் தன்னிச்சையான போக்கின் காரணமாக, இரவோடு இரவாக தேவகோட்டைக்கு மாற்றியதோடு, ஊழியர்களையும் மாற்றி உத்தரவு பிறப்பித்து மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளார். மேலாண்மை இயக்குனர் தனியாருக்கு எப்சி வேலைகளை வழங்குவதற்காக தான் இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிய வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆறு டெம்போக்கள் இருக்கிறது. புதிதாக மூன்று டெப்போக்கள் உருவாகுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. காரைக்குடி மண்டலத்தில் அதிகமான டெப்போக்கள் இருக்கும் மாவட்டம் இராமநாதபுரம் தான். ராமநாதபுரம் மண்டலம் ஆகும் உரிமை, இந்த நடவடிக்கையால் பறிபோய் இருக்கிறது. எனவே மாற்றப்பட்ட எப்சி யூனிட்டை மீண்டும் இராமநாதபுரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு மாவட்ட செயலாளர் எம்.சிவாஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து மத்திய சங்கத் தலைவர் எஸ்.ஆர்.ராஜன் பொதுச்செயலாளர் தெய்வவீரபாண்டியன், துணைத் தலைவர் வி.பாஸ்கரன், கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.கருணாமூர்த்தி, குடிநீர் சங்க மாவட்ட செயலாளர் எம்.மலைராஜன், கட்டுமான சங்க மாவட்ட தலைவர் ஆர்.வாசுதேவன், ஓய்வு பெற்ற சங்கத் தலைவர் எஸ்.பி. கேசவன், தனியார் மோட்டார் சங்கத் தலைவர் எம்.மணிக்கண்ணு, சிவில் சப்ளைகார்ப்பரேஷன் சங்க மண்டல செயலாளர் பழனி உள்ளிட்டோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து அரங்கம், டாஸ்மார்க், அரங்கம், லோடுமேன், ஆட்டோ சங்கம், மாற்றுத்திறனாளி சங்கம் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.

Similar News