பெண் உதவி பொறியாளரை தாக்க முயன்ற ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்

சிவகங்கை பெண் உதவி பொறியாளரை இரும்பு நாற்காலியை தூக்கி தாக்க முயன்ற ஊராட்சி மன்ற தலைவரின் கணவரின் செயலை கண்டித்து அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

Update: 2024-07-26 15:04 GMT
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை யூனியன் அலுவலகத்தில் பெண் உதவி பொறியாளராக இருப்பவர் கிருஷ்ணகுமாரி இவர் ஒன்றிய அலுவலகத்தில் பணியில் இருந்துபோது கோவனூர் கிராமத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் முருகன் என்பவர் சாலை போட்டதற்கான பில்லை கொண்டுவந்து கொடுத்துள்ளார் அப்போது பெண் பொறியாளர் கிருஷ்ணகுமாரி டெண்டர் வைக்காத சாலைக்கு எப்படி சாலை போட்டீர்கள் என்று கேட்டுள்ளார் இதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது ஆபாசமாகவும் பேசியதாகவும் கூறப்படுகிறது கோபமுற்ற ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் முருகன் எதிரில் இருந்த இரும்பு நாற்காலியெ தூக்கி அடிக்க முற்பட்டார் உடனடியாக அங்கு இருந்த ஊழியர்கள் வந்து பெண் பொறியாளருக்கு பாதுகாப்பு கொடுத்தனர் அதனைத் தொடர்ந்து யூனியன் அலுவலகத்தை பூட்டி ஊழியர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்

Similar News