கூட்டுறவு துறை சார்பில் விவசாயிகளுக்கான சேமிப்பு கிடங்கு குறித்து பயிற்சி முகாம் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு சேமிப்பு கிடங்கு குறித்து பயிற்சி முகாம் நடந்தது. முகாமினை புதுடில்லி சேமிப்பு கிடங்கு மேம்பாடு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் சென்னை நடேசன் கூட்டுறவு பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தியது. கள்ளக்குறிச்சி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். பொது விநியோக திட்ட துணை பதிவாளர் சுரேஷ், சரக இணைப்பதிவாளர் சகுந்தலா முன்னிலை வகித்தனர். நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவன விரிவுரையாளர் நாகராஜன் வரவேற்றார். முகாமில் ஓய்வு பெற்ற மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவன உதவி பொது மேலாளர் கண்ணன், பயிற்சியாளர் மாதேஷ் ஆகியோர் பங்கேற்று விவசாய விளை பொருட்களை சேமித்து வைத்து பயன்பெறுவது மற்றும் சேமிப்பு கிடங்கு மேம்பாடு ஒழுங்குமுறை ஆணையம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். பின்னர் நிறைமதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுபாட்டில் உள்ள மாடூர் கிராமத்தில் 100 மெட்ரிக் டன் கொள்ளளவுள்ள கிடங்கினை விவசாயிகள் பார்வையிட்டு பயிற்சி பெற்றனர்.