நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்களை ஏலம் விடப்பட்டு வெட்டும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து எழுச்சி முன்னணியினர் போராட்டம்

போராட்டம்

Update: 2024-07-29 07:48 GMT
தேனியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி பழமையான மரங்களை அகற்றுவதற்கு நெடுஞ்சாலை துறை சார்பில் கடந்த ஒரு வாரம் முன்பு ஏலம் விட முடிவு செய்யப்பட்டது அதன்படி தேனி - பெரியகுளம் ரோட்டில் உள்ள பல ஆண்டுகள் பழமை வாய்ந்த 23 புளிய மரங்கள் 2.19 லட்சம் ரூபாய்க்கு நெடுஞ்சாலை துறையினர் ஏலம் விட்டனர் இந்த நிலையில் ஏலம் எடுத்த நபர்கள் மரங்களை வெட்டும் பணியில் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டு வந்தனர் பல ஆண்டுகளாக இருந்த மரங்களை வெட்டுவதற்கு சமூக ஆர்வலர்களும், அமைப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் இந்த நிலையில் மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து எழுச்சி முன்னணியினர் போராட்டம் நடத்தினர் பழமையான மரங்களை வெட்டக்கூடாது என கூறி வெட்டும் பணியை தடுத்து நிறுத்திய இந்த எழுச்சி முன்னணியினர் வெட்டப்பட்ட மரங்களை கையில் எடுத்து போராட்டம் செய்து பணிகளை நிறுத்தக்கோரி போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பின்னர் அவர்களை சமாதானப்படுத்திய போலீசார் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கூறியதை அடைத்து அவர்கள் கலைந்து சென்றனர் இதனால் மரம் வெட்டும் பணி சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது இதனால் தேனி - பெரியகுளம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

Similar News