பாசன கால்வாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்க விவசாயிகள் கோரிக்கை

மதுராந்தகம் ஏரியிலிருந்து விவசாயத்துக்கு செல்லும் பாசன கால்வாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்க விவசாயிகள் கோரிக்கை

Update: 2024-07-29 08:56 GMT
மதுராந்தகம் ஏரியிலிருந்து விவசாயத்துக்கு செல்லும் பாசன கால்வாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்க விவசாயிகள் கோரிக்கை
செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரி மதுராந்தகம் ஏரி.. இதில் இருந்து சுமார் 1500 ஏக்கர் விவசாய விளை நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன. மதுராந்தகம் அருகே உள்ளே வளர்பிறை கத்திரிச்சேரி,தோட்டநாவல் முள்ளி,வளர்பிறை உள்பட ஏழு கிராம விவசாயிகள் பயன்பெறுகின்றனர். இந்த விவசாய பாசனத்திற்காக கால்வாயில் வரும் நீருடன் மதுராந்தகம் நகராட்சியின் கழிவு நீர் கலக்கப்படுவதாகவும் இதனால் பல்வேறு தோல் நோய்கள் ஏற்படுவதாகும் இதனால் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் தண்ணீர் வருவதால் இதை பாசனம் செய்தால் விவசாயத்திற்கு நடவு செய்யவும் கலை எடுக்கவும் யாரும் வருவதில்லை காரணம் பல்வேறு தோல் நோய்கள் ஏற்படுவதால் பெண்கள் அச்சப்படுகின்றனர்..ஆகவே இந்த பாசன கால்வாயில் கலக்கப்படும் கழிவு நீரை வேறு கால்வாய் அமைத்து சீரான கழிவு நீர் இல்லாத பாசனை நீர் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.. இது சம்பந்தமாக வருவாய் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையர்,பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

Similar News