ராமநாதபுரம் ராமநாதபுரம் பள்ளி மாணவர்கள் சாதனை

மாநில அளவிலான டேக் வோண்டா போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை பெற்று ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் நேரில் பாராட்டினார்

Update: 2024-07-29 11:28 GMT
ராமநாதபுரம் தமிழ்நாடு அளவிலான டேக் ஹோண்டா மாநில விளையாட்டுப் போட்டி மதுரை டிவிஎஸ் லட்சுமி பள்ளியில் நடைபெற்றது இப் போட்டியில் தமிழக முழுவதும் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர் மதுரை திருச்சி திண்டுக்கல் திருநெல்வேலி கோவை சிவகங்கை விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த பள்ளி மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர் இதில் ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம் காத்தான் நேஷனல் அகாடமி ஐ சி ஐ சி பள்ளி மாணவர்கள் மூன்று தங்க பதக்கங்களையும் மூன்று சில்வர் மூன்று பிரான்ஸ் மெடல்களை தட்டிச் சென்றனர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த நேஷனல் அகாடமி பள்ளி மாணவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜித் சிங் கலோன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் மாணவர்களை அழைத்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார் இதுபோன்று பல்வேறு சாதனைகளை பள்ளி மாணவர்கள் செய்ய வேண்டும் அதற்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்யும் என தெரிவித்து ஊக்கப்படுத்தினார் அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ், நேஷனல் அகாடமி பள்ளியின் தாளாளர் டாக்டர் செய்யதா ஐ சி எஸ் சி பள்ளியின் முதல்வர் ஜெயலட்சுமி, டேக் வோண்டா போட்டியின் மூத்த பயிற்சியாளர் கர்ணன் மற்றும் முனியசாமி ஆகியோர்கள் உடன் இருந்தனர் அவர்களையும் மாவட்ட ஆட்சியர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்

Similar News