ராமநாதபுரம் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் திறப்பு

ராமநாதபுரத்தில் 3.62 கோடி மதிப்பிட்டில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தமிழ்நாடு முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் குத்து விளக்கேற்றி கல்வெட்டுக்களை திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.

Update: 2024-07-29 12:14 GMT
ராமநாதபுரத்தில் 3.62 கோடி மதிப்பிட்டில் புதிதாக கட்டப்பட்ட ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் திறந்து விழா நடைபெற்றது. இதில், தமிழ்நாடுy முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனைதொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங்க காலோன்,சட்டப்பேரவை உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் திருவாடானை சட்டப்பேரவை உறுப்பினர் கரு.மாணிக்கம்,ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பிரபாகரன் ஆகியோர் குத்து விளக்கேற்றி கல் வெட்டுகளை திறந்து வைத்தனர். இதன் புதிய கட்டத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டனர். இதன் பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலர்கள்,ஊழியர்கள் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம்,துணைத்தலைவர் பிரவீன் தங்கம், மற்றும் நகர் மன்ற உறுப்பினர் ரமேஷ்கண்ணா,ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் அலுவலர்கள் மற்றும் மாநில விவசாய அணி துணைச்செயலாளர் குணசேகரன்,மாவட்ட கவுன்சிலர் வாசுதேவன்,மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் பி.டி.ராஜா, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Similar News