பிரபல யூ ட்யூபர் சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலிஸ் காவல் எடுத்து விசாரிக்க உதகை நடுவர் நீதிமன்ற நீதிபதி தமிழினியன் உத்தரவிட்டார்.
பிரபல யூ ட்யூபர் சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலிஸ் காவல் எடுத்து விசாரிக்க உதகை நடுவர் நீதிமன்ற நீதிபதி தமிழினியன் உத்தரவிட்டார்.
பிரபல யூ ட்யூபர் சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலிஸ் காவல் எடுத்து விசாரிக்க உதகை நடுவர் நீதிமன்ற நீதிபதி தமிழினியன் உத்தரவிட்டார். தமிழக காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களை தரக்குறைவாக பேசிய Youtuber சவுக்கு சங்கர் மீது உதகை புதுமந்து காவல் நிலைய ஆய்வாளர் அல்லிராணி சைபர் கிரைம் குற்ற பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் இன்று உதகையில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி தமிழினியன் முன்னிலையில் சவுக்கு சங்கர் ஆஜராகினார். ஆகஸ்ட் 12 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து போலிஸ் தரப்பில் 5 நாட்கள் கஸ்டடி கேட்டு மனு செய்திருந்த நிலையில் ஒரு நாள் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் இந்த 24 மணி நேர போலிஸ் விசாரணையில் 4 மணி நேரத்துக்கு ஒரு முறை அவரின் வழக்கறிஞர்கள் அவரிடம் உரையாடலாம் எனவும் அனுமதி அளித்தார். பேட்டி: பால நந்தகுமார், சவுக்கு சங்கர் வழக்கறிஞர்