மோளிப்பள்ளி கந்தசாமி கோயில் ஆடி கிருத்திகை பூஜை.

திருச்செங்கோடு அருகே உள்ள மோளிப்பள்ளி கந்தசாமி கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை.

Update: 2024-07-30 08:02 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மோளிப்பள்ளியில் மிகவும் பிரசித்தி பெற்ற கந்தசாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு கிருத்திகை தோறும் சிறப்பு பூஜை நடைபெறும். ஆடி மாதத்தை முன்னிட்டு நேற்று மாலை சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பஞ்சாமிருதம்,பால்,மஞ்சள்,திருமஞ்சல்,பன்னீர்,திருநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News