ராமநாதபுரம் ராமநாதபுரம் மீனவர்கள் தமிழக முதல்வருக்கு நன்றி

இலங்கையில் சேதமடைந்துள்ள தமிழக மீனவர்கள் 5 லட்சத்திலிருந்து 6 லட்சமாகவும், நாட்டுப்படகுகளுக்கு 1.50 லட்சத்திலிருந்து 2 லட்சம் உயர்த்திய தமிழ்நாடு முதல்வருக்கு மீனவ சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர்.

Update: 2024-07-30 09:22 GMT
ராமநாதபுரம் அனைத்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவ சங்கத்தலைவர்கள் ராமநாதபுரம் மீன்வளத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் மீன்வளத்துறை இணை இயக்குநர் பிரபாவதி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கத்தை சந்தித்தனர். தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு சேதமடைந்துள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளுக்கு இழப்பீடு உயர்த்திட வழங்கிட வேண்டும். பாம்பன் கால்வாய் தூர் வரவேண்டும். மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கான வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் சட்டப்பேரவை உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் சென்று முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுத்து வந்தனர். எங்கள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதல்வர் இலங்கையில் சேதமடைந்துள்ள படகுகளுக்கு வழங்கப்பட்டு வந்த 5 லட்சம் இழப்பீட்டை 6 லட்சமாகவும்,நாட்டுப்படகுகளுக்கு 1.50 லட்சத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளர். மேலும் பாம்பன் கால்வாய் தூர் வர ஆய்வு பணி தொடங்கவும். துமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தமிழ்நாடு நாடாளு மன்ற உறுப்பினர்கள் குழு அமைத்து ஒன்றிய அரசிடம் தீர்வு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். இதற்கு முதல்வருக்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர் அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

Similar News