ராமநாதபுரம் மீனவர்கள் காவல் மட்டும் விடுதலை

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 மீனவர்களின் வழக்கு ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது வழக்கை விசாரித்த நீதிபதி 26 மீனவர்களில் 20 மீனவர்களை மட்டும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்

Update: 2024-07-30 12:43 GMT
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஜூன் 18ஆம் தேதி கைது செய்யப்பட்ட கோட்ட பட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்களும் ஜூன் 23ஆம் தேதி நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 மீனவர்களின் வழக்கு ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது வழக்கை விசாரித்த நீதிபதி 26 மீனவர்களில் 20 மீனவர்களை மட்டும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் மீதமுள்ள ஆறு மீனவர்களில் மூன்று மீனவர்கள் இரண்டாவது முறையாக இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து அந்த மூன்று மீனவர்களுக்கும் ஓராண்டு சிறை தண்டனையும் மீதமுள்ள மூன்று மீனவர்கள் விசைப்படகு உரிமையாளர்கள் என்பதால் அவர்களுக்கு 4 மில்லியன் ரூபாய் அபராதமும் அபராதத்தை கட்ட தவறும் பட்சத்தில் ஆறு மாத கால சிறை தண்டனையும் விதித்து இலங்கை நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது

Similar News