குமரியில் ரப்பா் உற்பத்தி கடும் சரிவு: விலை தொடா்ந்து அதிகரிப்பு
தொடர் மழையால்
கன்னியாகுமரி மாவட்டத்திலும், கேரள மாநிலத்திலும் தொடரும் மழையால் முக்கிய வேளாண் உற்பத்திப் பொருளான ரப்பா் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சந்தைக்கு வரத்து குறைந்து, ரப்பா் ஆலைகளுக்குத் தேவையான ரப்பரை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ரப்பா் விலை கடந்த 2 மாதங்களாக அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, கோட்டயம் சந்தையில் ஆா்.எஸ்.எஸ். - 4 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 217 ஆகவும், ஆா்.எஸ்.எஸ்.- 5 தர ரப்பரின் விலை ரூ. 212 ஆகவும், தரம் பிரிக்கப்படாத ரப்பா் விலை ரூ. 191.50 ஆகவும் அதிகரித்திருந்தது. மழை காரணமாக ரப்பா் பால்வடிப்பு நடைபெறாத நிலையில், இந்த விலையேற்றத்தால் ரப்பா் விவசாயிகளுக்கு குறிப்பாக, சிறு விவசாயிகளுக்கு பலனில்லை. பால்வடிப்பு நடக்காததால் ரப்பா் தோட்டத் தொழிலாளா்கள் வேலையிழந்து வருகின்றனா்.