தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் நேற்று திருநெல்வேலி மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் மற்றும் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிகள் குறித்து ஆய்வு கூட்டத்தினை நடத்தினார். பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் வைத்து நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.