கிராவல் மண் அள்ளிய ஜேசிபி, டிப்பர் லாரிகள் பறிமுதல்

சிவகங்கை அருகே மயானத்தில் கிராவல் மண் அள்ளிய 2 ஜேசிபி இயந்திரங்கள், 5 டிப்பா் லாரிகளை புதன்கிழமை கிராம மக்கள் சிறைபிடித்தனா்.

Update: 2024-08-02 08:52 GMT
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகேயுள்ள வள்ளநேரி பகுதியில் சுமாா் 400 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் வசிக்கின்றனா். இங்குள்ளவா்களுக்கு பொது மயானம் சிவகங்கை-இளையான்குடி சாலையோரம் உள்ளது. இந்நிலையில் நள்ளிரவில் 2 ஜேசிபி இயந்திரங்கள், 5 டிப்பா் லாரிகளை கொண்டு மயானத்தில் கிராவல் மண்ணை ஒரு கும்பல் அள்ளியது. இதைக் கண்ட கிராம மக்கள் அந்த வாகனங்களை சிறைபிடித்தனா். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகா் போலீசார், வருவாய்த் துறையினா் விசாரணை நடத்தினா். பிடிபட்ட வாகனங்களை வருவாய்த் துறையினரும், காவல் துறையினரும் பறிமுதல் செய்யாமல் அனுப்பி வைத்துவிட்டதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டினா்.

Similar News