காவிரியில் வெள்ளபெருக்கு நீரேற்று நிலையத்தை சூழ்ந்த வெள்ளநீர்

சங்ககிரி: காவிரியில் வெள்ளபெருக்கு நீரேற்று நிலையத்தை சூழ்ந்த வெள்ள நீர் பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீர் பாதிக்கும் அபாயம்....

Update: 2024-08-02 16:25 GMT
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர் அருகே உள்ள புள்ளாகவுண்டம்பட்டி காவிரி ஆற்றங்கரையையொட்டி அமைக்கப்பட்டுள்ள சங்ககிரி பேரூராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்லும் நீரேற்று நிலையத்தில் வெள்ள நீர் சூழ்ந்ததால் சங்ககிரி பகுதிக்கு செல்லும் குடிநீர் வழங்கும் பணி பாதிப்பு ஏற்படும் அபாயம்... கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதையடுத்து கர்நாடக அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது . அதனையடுத்து மேட்டூர் அணை அதன் முழு கொள்ளவை எட்டியுள்ளது. இதனையடுத்து 16 கண் மதகு வழியாகவும், கிழக்கு, மேற்கு கரை கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் அதிகளவில் திறந்துவிடப்படுள்ளதையடுத்து தேவூர் காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளில் தண்ணீர் அதிகளவில் புகுந்துள்ளது. இதில் சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புள்ளாகவுண்டம்பட்டி ஊராட்சி ஆற்றங்கரையையொட்டியுள்ள பகுதியில் சங்ககிரி பேரூராட்சிக்கு செல்லும் குடிநீரேற்று நிலையத்தில் தண்ணீர் புகுந்துள்ளது. தண்ணீர் புகுந்ததையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குடிநீரேற்று நிலையத்தில் தற்காலிகமாக பேரூராட்சிக்குள்பட்ட 18 வார்டுகள், 24 ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு காவேரி குடிநீர் வழங்கும் பணி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Similar News