தமாக சார்பில் நிர்வாகிகள் கூட்டம்

தமாக சார்பில் நிர்வாகிகள் கூட்டம்

Update: 2024-08-03 08:17 GMT
தமிழ் மாநில காங்கிரஸ் நாமக்கல் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருச்செங்கோடு சங்ககிரி சாலையில் அமைந்துள்ள நாமக்கல் மேற்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற பெற்றது மாவட்ட தலைவர் கே.செல்வகுமார் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பள்ளிபாளையம் நகரத் தலைவர் வெங்கட்ராமன், மல்லசமுத்திரம் வட்டார தலைவர் சதீஷ்குமார், திருச்செங்கோடு மேற்கு வட்டார தலைவர் முத்தையா மூர்த்தி, மாவட்ட பொது செயலாளர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர்கள் சையது காசிம், வடிவேல், மாவட்ட எஸ்.சி எஸ்டி பிரிவு தலைவர் சதாசிவம், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் மெய் குமார், மாவட்ட இலக்கிய பிரிவு தலைவர் பிரதீப் குமார், மாவட்ட தொழிற்சங்கப் பிரிவு தலைவர் எல்.ஐ.சி திருமூர்த்தி, மாவட்ட தலைமை நிலைய செயலாளர் ஷாமிலி கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்து முருகானந்தம், தனசேகரன், கலைச்செல்வன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. திருச்செங்கோடு புதிய பஸ் நிலைய மாற்றத்தை உடனடியாக நகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வலியுறுத்தப்படுகிறது மக்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்கின்ற வகையிலே தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக பொதுமக்களிடையே கையெழுத்து இயக்கம் நடத்துவது என்றும் கையெழுத்துகளை தமிழக முதல் அமைச்சருக்கு அனுப்பி வைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. பஸ் நிலையம் இடமாற்றத்தை கைவிடாவிட்டால் அனைத்து கட்சி மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்போடு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மேட்டூர் அணை உபரி நீர் கால்வாய் திட்டம் த‌மிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது மேட்டூர் கிழக்கு கால்வாயில் தண்ணீர் வீணாகி மீண்டும் காவிரியில் கலக்கின்ற தண்ணீரை குழாய் மூலம் ஏரிகளுக்கு நிரப்புவதற்கு நாமக்கல் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கேட்டு கொண்டுள்ளது

Similar News