ஆடி அமாவாசை அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜை...

சங்ககிரி: ஆடி அமாவாசை கல்படங்கம் அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் தரிசனம்....

Update: 2024-08-04 07:55 GMT
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலையும் முதலே அம்மனுக்கு பால் தயிர் சந்தனம் திருமஞ்சனம் பன்னீர் இளநீர் குங்குமம் திருநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய திரவிய பொருளைக் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது . பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அருள்மிகு அங்காளம்மனை வழிபாடு செய்தனர். மேலும் தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடக அணைகளிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீர் முழுவதும் அப்படியே மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படுவதால் காவிரி ஆற்றில் குளிக்க பொதுமக்கள், பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதைக்கப்பட்டு காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கல்வடங்கம் காவிரி கரையோர பகுதிகளில் திதி கொடுக்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Similar News