கச்சினாம்பட்டியில் சட்டவிரோத சேவல் சண்டை. ஒருவர் கைது. ஒருவர் தலைமறைவு.
கச்சினாம்பட்டியில் சட்டவிரோத சேவல் சண்டை. ஒருவர் கைது. ஒருவர் தலைமறைவு.
கச்சினாம்பட்டியில் சட்டவிரோத சேவல் சண்டை. ஒருவர் கைது. ஒருவர் தலைமறைவு. கரூர் மாவட்டம் சின்னகாராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கச்சினாம்பட்டி பகுதியில் சட்டவிரோத சேவல் சண்டை நடப்பதாக காவல் உதவி ஆய்வாளர் மகாமுனிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஆகஸ்ட் மூன்றாம் தேதி மாலை ஐந்து முப்பது மணி அளவில் கச்சிராம் பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள குளக்கரைப்பகுதியில் சட்ட விரோதமாக சேவல் சண்டை நடப்பது கண்டறியப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் உதவி ஆய்வாளர் மகாமணி இந்த சேவல் சண்டை ஈடுபட்ட அரவக்குறிச்சி தாலுகா மணப்பாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டனை கைது செய்தார். அதே சமயம் கரூர் ராஜபுரம் கிழக்கு பகுதியைச் சேர்ந்த அஜித் வயது 31 என்பவர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இதனால் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் சின்ன தாராபுரம் காவல்துறையினர்.