குரும்பலூரில் அதிமுக சார்பில் துண்டு பிரசுரம் விநியோகம்

அதிமுக

Update: 2024-08-05 03:31 GMT
குரும்பலூரில் அதிமுக சார்பில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசு பதவி விலக வலியுறுத்தி மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் தலைமையில் அதிமுகவினர் துண்டு பிரசுரங்கள் வழங்கினர். அதிமுக குரும்பலூர் பேரூர் கழகத்தின் சார்பில் குரும்பலூரில் பொதுமக்களிடம் திமுக அரசு பதவி விலக வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை, மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை. இரா.தமிழ்செல்வன் தலைமையில் முன்னாள் அமைச்சர் வரகூர். அருணாச்சலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூவை. செழியன் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார். தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலர் உயிரிழந்து வருகின்றனர் என்றும், போதைப் பொருள் பழக்கம் இளைஞர்களிடையே மிகவும் அதிகரித்து வருகிறது என்றும், இதனை தடுக்க தவறிய திமுக அரசு பதவி விலக வேண்டுமென வியாபாரிகள், பொதுமக்கள், மாணவர்களிடம் அதிமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குரும்பலூர் பேரூர் கழக செயலாளர் செந்தில்குமார் செய்து இருந்தார். இந்நிகழ்வில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராஜேஸ்வரி, பரமேஸ்வரி முருகன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News