ஆறு வழி சாலை அமைக்கும் பணியினை ஆட்சியருடன் அமைச்சர் உதயநிதி ஆய்வு

தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் சார்பில் சென்னை எல்லை சாலை திட்டத்தில் 12.5 கிலோமீட்டர் ஆறு வழி சாலை அமைக்கும் பணியினை திருவள்ளூர் அருகே உள்ள வெள்ளியூர் பகுதியில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய

Update: 2024-08-05 11:55 GMT
தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் சார்பில் சென்னை எல்லை சாலை திட்டத்தில் 12.5 கிலோமீட்டர் ஆறு வழி சாலை அமைக்கும் பணியினை திருவள்ளூர் அருகே உள்ள வெள்ளியூர் பகுதியில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு திருவள்ளூர் அருகே சென்னை வெளிவட்ட எண்ணூர் துறைமுகம் முதல் மகாபலிபுரம் வரையிலான 132.87 கிலோமீட்டர் ஆறு வழி சாலை அமைக்கும் பணியினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார் திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகத்தில் இருந்து தச்சூர் புன்னப்பாக்கம் வெள்ளியூர் மூலக்கரை அரண்வாயல் செங்காடு ஸ்ரீபெரும்புதூர் சிங்கப்பெருமாள் கோயில் மானாமதி பூஞ்சேரி 132.87 கிலோமீட்டர் தூரம் சாலையானது ஐந்து கட்டங்களாக சென்னை பெருவிரல் ரிங் ரோடு திட்டம் புதிய ஆறு வழிச்சாலை அமைக்கும் பணி ஆனது நடைபெற்று வருகிறது இதில் தாமரைப்பாக்கம் அருகே உள்ள புண்ணம்பாக்கம் தொடங்கி நசரத் கிராமம் வரை 12.5 கிலோமீட்டர் சாலை அமைக்கும் பணியினை எல் அண்ட் டி தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது 12.8 கிலோமீட்டர் சாலையை ரூபாய் 719.10 பொறியியல் கொள்முதல் கட்டுமான பத்திர முறையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்ட பணியானது மூன்று வருடங்கள் 2-8- 2025 அன்று தேதிக்குள் முடிக்க வேண்டும் ஏழு வருடங்கள் பராமரிப்பு காலத்தையும் லார்சன் அண்ட் டு ப்ரோ நிறுவனம் ஏற்க வேண்டும் தற்போது மழை காலம் தொடங்கியுள்ள நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தமிழகத்தில் நடைபெற்று வரும் இருபதுக்கு மேற்பட்ட சாலை பணிகள் முறையாக நடைபெறவில்லை என்று கேள்வி எழுப்பிய நிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் பணியை மழைக்காலத்தில் விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் 70% பணிகள் நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் கூறிவரும் நிலையில் மெய்யூர் சாலையில் முறையான அணுகு சாலை மேம்பாலம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Similar News