கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மோட்டார் பழுதடைந்து வீடுகளிலும் தெருக்களிலும் கழிவுநீர் வெளியேறி வருவதால் பொதுமக்கள் உடல் நல பாதிப்பு

கழிவுநீர்

Update: 2024-08-06 07:00 GMT
நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு தேனி அருகே சடையால் கோயில் சாலையில் தேனி நகராட்சிக்குட்பட்ட 32 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்து வருகின்றது இந்த குடியிருப்பு பகுதிகளில் செல்லும் கழிவுநீர் குழாய்களில் இருந்து கழிவுநீர் தொடர்ந்து வெளியேறி வருகிறது நேற்று மாலை முதல் தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருக்கும் கழிவுநீர்களால் தெருக்களில் குளம் போல் தேங்கி நிற்கின்றது மேலும் பல வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்திருப்பதால் அசுத்தம் ஏற்பட்டு நோய்வாய் ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கின்றனர் மேலும் குடிநீர் இணைப்புகளிலும் கழிவு நீர் கலந்திருப்பதால் தண்ணீர் கூட குடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் சாலைகளில் உருண்டு செல்லும் சாக்கடை கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் தங்களது மூக்கை மூடிக் கொண்டு செல்லும் நிலை மூக்கை மூடிக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் மேலும் பல தலைவலி காய்ச்சல் உள்ளிட்ட உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டாக தெரிவிக்கின்றன மேலும் இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடமும் நேற்றிலிருந்து புகார் தெரிவித்தும் இன்று வரை ஒருவர் கூட வந்து பார்க்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனர் இந்தப் பகுதிகளுக்கு அருகே உள்ள பாதாளச் சாக்கடை சுத்தம் செய்யும் நிலையத்தில் நேற்றிலிருந்து மோட்டார் பழுதடைந்ததால் கழிவுநீர்களை சுத்தம் செய்ய முடியாததால் தான் கழிவுநீர் வெளியேறி வருவதாக தெரிவிக்கின்றன இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்கவில்லை

Similar News