மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் பங்கேற்பு....

சங்ககிரி:காவேரிபட்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் பங்கேற்பு....

Update: 2024-08-06 16:01 GMT
சேலம் மாவட்டம் சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோனேரி பட்டி ஊராட்சி, கோனேரி பட்டி அக்ரஹாரம் ஊராட்சி, காவேரி பட்டி ஊராட்சி காவேரி பட்டி அக்ரஹாரம் ஊராட்சி, புள்ளாக்கவுண்டம்பட்டி ஊராட்சி ஆகிய கிராம மக்கள் பயன்பெறும் வகையில் மக்களுடன் முதல்வர் முகாம் காவேரி பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் லோகநாயகி தலைமை தாங்கினார், தாசில்தார் வாசுகி,பிடிஓ சீனிவாசன் கோனேரி பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கண்ணாயாள் காசிராஜன், கோனேரி பட்டி அக்ரஹாரம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன், காவேரி பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அல்லி ராணி, காவேரி பட்டி அக்ரஹாரம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்திபரமசிவன், புள்ளாக்கவுண்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கீதாபாலு, ஒன்றிய கவுன்சிலர் செங்கோடன் ஆகியோர் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தனர் , இதனையடுத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் லோகநாயகி பெற்றுக் கொண்டார்      மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம்   இந்த சிறப்பு வாய்ந்த மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணுமாறு கேட்டுக்கொண்டார் இந்த முகம் மூலம் 1157 மனுக்கள் பெறப்பட்டன. முன்னதாக எரிசக்தித்துறை, மின்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய்த்துறை, வீட்டுவசதித்துறை, , காவல்துறை, மாற்று திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் பதிவேற்றம் செய்யும் பணிகளை பார்வையிட்டு மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில்   தாசில்தார் வாசுகி, தேவூர் வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி, சங்ககிரி பிடிஒ சீனிவாசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி , கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் பயனாளிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News