உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களுக்கு மைம் நிகழ்ச்சி

தாய்ப்பால் வார விழா

Update: 2024-08-07 11:20 GMT
ஆகஸ்ட் முதல் வாரத்தில் உலகம் முழுவதிலும் உலக தாய்ப்பால் வார விழா அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்கள் முன்னிலையில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழாவில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தையும், எப்பொழுது வரை கொடுக்க வேண்டும், கொடுப்பதனால் குழந்தைகளுக்கும், பாலூட்டும் தாய்களுக்கும் எந்த வகையில் நம்மை கிடைக்கும், தாய்ப்பால் கொடுக்காத குழந்தைகள் மற்றும் தாய்களுக்கு எந்தெந்த வகையில் உடலளவில் எவ்வகை பாதிப்பை ஏற்படுத்தும் உள்ளிட்டவைகளை மைம் நிகழ்ச்சியின் மூலம் தேனி அரசு செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் செய்து காண்பித்தனர். மேலும் இந்த உலக தாய்ப்பால் வார விழாவில் தாய்ப்பால் தானம் பண்ணுவதன் அவசியம் குறித்தும், எப்படி தாய்ப்பால் தானம் வழங்குவது என்பது குறித்தும் விளக்கி கூறப்பட்டதோடு தாய்ப்பால் தானம் வழங்கி வரும் மருத்துவர், செவிலியர் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட மூவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் குழந்தை பெற்ற தாய்மார்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Similar News