கம்பளிப்பூச்சி அட்டகாசம் மக்கள் விடுத்த கோரிக்கை

சங்ககிரி: கம்பளிப் பூச்சிகள் அட்டகாசம் மக்கள் எடுத்த கோரிக்கை....

Update: 2024-08-07 11:28 GMT
சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த தேவூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கம்பளி பூச்சிகளின் தொல்லை பொதுமக்கள் அச்சம்... நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் வேண்டுகோள்.... சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளான தேவூர், அம்மாபாளையம், மைலம்பட்டி, அரசிராமணி ஓடசக்கரை, செட்டிபட்டி, குள்ளம்பட்டி , காவேரிப்பட்டி, சென்ராயனூர், வட்ராம்பாளையம், மோட்டூர் ,ஒக்கிலிப்பட்டி, தண்ணீர்தாசனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது தொடர் மழை பெய்து வருவதால் கம்பளிப் பூச்சிகள் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. இந்த கம்பளி பூச்சிகள் வீடுகள் மற்றும் பல்வேறு தொழில் புரியும் இடங்களிலும் கோவில்களிலும் அதிக அளவில் உலாவி வருவதால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் இந்த பூச்சி மனிதர்கள் மீது பட்டாலே உடல் முழுவதும் தடித்து அரிப்பு ஏற்பட்டு விடும் இதனால் குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் அச்சத்தில் உள்ளனர். எனவே இந்த கம்பளிபூச்சிகளை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Similar News