வி.புத்துார் மாரியம்மன் கோவில் தேர் தீமிதி விழா

விழா

Update: 2024-08-08 02:26 GMT
அரகண்டநல்லுார் அடுத்த வி.புத்துார் மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு தேர், தீ மிதி விழா நடந்தது. அரகண்டநல்லுார் அடுத்த வி.புத்துார் மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா நடைபெற்று வந்தது. விழாவின் 9 ம் நாளான நேற்று தேர் தீ மிதி விழா நடந்தது. காலை 8:00 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதி வழியாக சென்று கோவிலை அடைந்தனர். பகல் 11:00 மணிக்கு பால்குட அபிஷேகம், அம்மன் தங்க காப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. வேண்டுதல் உள்ள பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். மாலை 3:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக சென்று தேர் நிலையை அடைந்தவுடன் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Similar News