ஆடிப்பூர திருநாளை முன்னிட்டு வன்னிவேடு அகத்தீஸ்வரர் திருக்கோவிலில் புவனேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு வளைகாப்பு நிகழ்வை நடத்தி அம்மனை வழிபட்ட பெண் பக்தர்கள்* ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த வன்னிவேடு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவிலில் ஆடிப்பூர திருநாளை முன்னிட்டு காலையில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.. அதனைத்தொடர்ந்து மாலையில் புவனேஸ்வரி அம்மனுக்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த 1000 வளையல்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சீர்வரிசைகளை அம்மனுக்கு முன்பாக வைத்து சிறப்பு பூஜைகளை மேற்கொண்டு கோவிலுக்கு வருகை தந்த பெண்கள் பலரும் மூலவர் மற்றும் உற்சவர் அம்மனுக்கும் சிறப்பு வளைகாப்பு நிகழ்வை நடத்தி ஆரத்தி காண்பித்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டு அம்மனை பக்தி மனத்துடன் தரிசனம் செய்தனர் தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாளித்தார்.