பதினெட்டாம் படி ஸ்ரீ கருப்பண்ணசாமி பாத பால சுந்தரி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி திருவிழா
செங்குற்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியில் அமைந்துள்ள பதினெட்டாம் படி ஸ்ரீ கருப்பண்ணசாமி பாத பால சுந்தரி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி திருவிழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது
செங்குற்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியில் அமைந்துள்ள பதினெட்டாம் படி ஸ்ரீ கருப்பண்ணசாமி பாத பால சுந்தரி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி திருவிழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. செங்குன்றம், பாடியநல்லூர் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த 18-ஆம் படி ஸ்ரீ கருப்பண்ணசாமி பாத பால சுந்தரி மாரியம்மன் ஆலயத்தின் ஆடி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஆடித் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீப ஆராதனைகளும் பூஜைகளும் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிறுநியம் பலராமன் ஆகியோர் கலந்து கொண்டு கருப்பண்ண சாமியையும் சுந்தரி மாரியம்மன் சுவாமியையும் வழிபட்டனர் இவர்களுக்கு ஆலய ஸ்தாபகர் ராஜேந்திரன் ஆலய தலைவர் கார்மேகம் ஆலய அன்னதான தலைவர் கே ஆர் வெங்கடேசன் ஆகியூர் பரிவட்டம் கட்டி சிறப்பு மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து ஆடி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அழைப்பாளர்கள் மாபெரும் அன்னதானத்தை ஆலய வளாகத்தில் துவங்கி வைத்தனர் இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து கோவில் அன்னதானம் அருந்தி சென்றனர். இந்நிகழ்ச்சியில் ஆலய செயலாளர் முத்து கண்ணன் பொருளாளர் மகேஷ் அன்னதான செயலாளர் ரவிச்சந்திரன் பொருளாளர் ராஜேஷ் மற்றும் கௌரவ ஆலோசகர்கள் ஆலய நிர்வாகிகள் பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.