இன்று நாகபஞ்சமி விழா!

பக்தி

Update: 2024-08-09 06:00 GMT
திருமயம் தாலுகா நச்சாந்துபட்டியில் நாகதேவி நல்லதங்காள் கோயில் உள்ளது. இங்கு நாக பஞ்சமி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மருங்கூரில் இருந்து நல்ல தங்காள் கோயில் பொங்கல் திடலுக்கு சுவாமி ஊர்வலம் வந்தது. இன்று (9ம் தேதி) காலை கணபதி ஹோமம், கோ பூஜை, மகாலட்சுமி பூஜைக்கு பின்னர் நாகபஞ்சமி பூஜைகள் நடத்தப்படுகின்றன. காலை 8.30 மணிக்கு பெண்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து வருகின்றனர். காலை 10.45 மணிக்கு மங்கல திரு முழுக்கு வழிபாடு நடக் கிறது. மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கி றது. இதில் 508 சுமங்கலி பெண்கள் பங்கேற்று அம்மன் சன்னதி முன்பு விளக்கேற்றி வழிபாடு நடத்துகின்றனர். நாளை (10ம் தேதி) காலை 11.45 மணிக்கு வழிபாடு முடிந்து பொங்கல் திடலில் இருந்து நல்லதங்காள், பரிவார தெய்வங்களுடன் கோயில் வீட்டை சென்ற டைகிறது. பூஜைகளை ரவிசங்கர் பட்டாச்சாரியார், திருவருள் நல்லி தெய்வீக பேரவையினர், நச்சாந்துபட்டி ஊரார் செய்துள்ளனர்.

Similar News