விவசாயிகளுக்கு மானவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடி பயிற்சி
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வேளாண்மைத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு மானவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடி பயிற்சி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வேளாண்மைத்துறை மாநில விரிவாக்க சீரமைப்புத் திட்டம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் ஒக்குப்பட்டி கிராமத்தில் மானவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடி பயிற்சி சிவகங்கை வேளாண்மை உதவி இயக்குநர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம் பேராசிரியர் விமலேந்திரன் மானாவாரி நிலக்கடலை சாகுபடியில் தரமான விதைத்தேர்வு, விதை நேர்த்தி செய்து விதைத்தல், விதையினை கடின படுத்தி விதைத்தல், வரிசை விதைப்பு அல்லது இயந்திரத்தின் மூலம் விதைத்தல், ஊடுபயிர் சாகுபடியில் துவரை,தட்டை பயறு விதைக்குமாறும், பூக்கும் பருவத்தில் நிலக்டலை நுண்ணூட்டம் ஏக்கருக்கு 5 கிலோ இட வேண்டும் என்றும் தெரிவித்தார் பின்னர் வேளாண்மை பல்கலைகழத்தின் மூலம் வழங்கப்படும் நிலக்கடலை ரிச் பூஸ்டர் ஏக்கருக்கு 2 கிலோ தெளிக்கவும், பயிர் பாதுகாப்பு பற்றிய நுட்ப கருத்துக்கள் வழங்கினார். வேளாண்மை அலுவலர் ஞானப்பிரதா வேளாண்மை விரிவாக்க மையங்களில் மானியத்தில் கிடைக்க கூடிய நிலக்கடலை நுண்ணூட்டம், திரவ உயிர் உரமான ரைசோபியம் உயிர் பூஞ்சான கொல்லியான டிரைக்கோடெர்மா விரிடி போன்றவற்றை வாங்கி பயன்பெறுமாறு அறிவுறுத்தினார் உதவி தொழில் நுட்ப மேலாளர் ராஜா நிலக்கடலை விதை நேர்த்தி செயல் விளக்கம் செய்து காண்பித்தார். இப்பயிற்சியில் ஒக்குப்பட்டி, V.புதுப்பட்டி, தேவன்பெருமாள்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சுமார் 40 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். இப்பயிற்சியினை உதவி வேளாண்மை அலுவலர் பாண்டீஸ்வரன், அட்மா திட்ட அலுவலர்கள் தம்பிதுரை, ராஜா, கீதா ஏற்பாடு செய்திருந்தனர்.