விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் இருப்பில் உள்ளன வேளாண் இணை இயக்குநா் தகவல்
சிவகங்கை மாவட்டம் கோடை விவசாயத்திற்கு விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கையிருப்பில் உள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்
சிவகங்கை மாவட்டத்தில் கோடை உழவு பணி தொடங்குவதற்கு தயாராகி வரும் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் இருப்பில் உள்ளதாக வேளாண் உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) பரமேஸ்வரன் தெரிவித்தாா். காளையாா்கோவில் வட்டாரம், கொல்லங்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் உரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வேளாண் உதவி இயக்குநா் பரமேஸ்வரன் கலந்து கொண்டு 60 விவசாயிகளுக்கு யூரியா, டி.ஏ.பி., பொட்டாஸ், காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்களை வழங்கினாா். பின்னா் கூறும்போது மாவட்டத்தில் தற்போது யூரியா 4,774 மெ.டன், டி.ஏ.பி. 1,001 மெ.டன், பொட்டாஷ் 532 மெ.டன், காம்ப்ளக்ஸ் 2,267 மெ.டன் இருப்பில் உள்ளன. விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் உரங்களை அரசு நிா்ணயம் செய்துள்ள விலைகளில் வாங்கி பயனடையலாம் என்று தெரிவித்தார். இந்த நிகழ்வில், கொல்லங்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் செயலா் காளீஸ்வரி மற்றும் கொல்லங்குடி, விட்டனேரி, புதுக்கிழுவச்சி, வாணியங்குடி, அரியாக்குறிச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனா்.