பள்ளி மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார்
மிதிவண்டி
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் நடப்பாண்டில் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் 3,962 மாணவர்கள், 4,889 மாணவிகள் என மொத்தம் 8,851 நபர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட உள்ளது. இதனை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக ஆண்டிபட்டி அருகே குன்னூர் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார். இந்நிகழ்வில் தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உள்பட பலர் பங்கேற்றனர்.