அரசிராமணி கிழக்குக்கரை நீர்ப்பாசன வாய்க்காலில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு !

சங்ககிரி: அரசிராமணி கிழக்குக்கரை நீர் பாசன வாய்க்காலில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு... தேவூர் போலீசார் விசாரணை...

Update: 2024-08-09 14:19 GMT
சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த அரசிராமணி கிழக்குகரை நீர்ப்பாசன வாய்க்கால் தண்ணீரில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் சடலத்தை தேவூர் போலீசார் மீட்டெடுத்து தானாக தண்ணீரில் விழுந்து இறந்தாரா? வேற ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை ... சங்ககிரியை அடுத்த அரசிராமணி பேரூராட்சிக்குட்பட்ட வெத்தலைகாரன்காடு பகுதியில் செல்லும் மேட்டூர் கிழக்குக்கரை நீர் பாசன கால்வாயில் அடையாளம் தெரியாத சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் மிதந்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தேவூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேவூர் போலீசார் நீர்ப்பாசன வாய்க்கால் தண்ணீரில் மிதந்து வந்த பெண் சடலத்தை மீட்டு பிரேத சோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நீர் பாசன வாய்க்கால் நீரில் மிதந்து வந்த பெண் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? தானாக வாய்க்கால் தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது துணிகள் துவைக்கும் போது தவறி விழுந்தாரா? அல்லது கொலை செய்து யாரேனும் வாய்க்காலில் சடலத்தை வீசி சென்றார்களா? என பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீர் பாசன வாய்க்கால்களில் அடையாளம் தெரியாத பெண் சடலமாக போலீசார் மீட்டெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News