பசு மாடுகளுக்கு பருவ மழை காலத்தில் ஏற்படும் நோய்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி

சிவகங்கை மாவட்டத்தில் பசு மாடுகளுக்கு பருவ மழை காலத்தில் ஏற்படும் நோய்களுக்கு வருடாந்திர பூஸ்டர் தடுப்பூசி போடப்பட உள்ளது

Update: 2024-08-09 15:35 GMT
சிவகங்கை மாவட்டம், பருவ மழை காலத்தில் ஏற்படும் தோல் கழலை நோய் வருடாந்திர பூஸ்டர் தடுப்பூசி  மாவட்ட எல்லைப்புற கிராமங்களிலும், நோய்த் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வளர்க்கப்படும் பசுக்கள், காளைகள், வண்டி மாடுகள் மற்றும் நான்கு மாத வயதிற்கு மேற்பட்ட கன்றுகளுக்கு போடப்படவுள்ளது. பசு மாடுகளுக்கு பருவ மழை காலத்தில் ஏற்படும் தோல் கழலை நோய் வருடாந்திர பூஸ்டர் தடுப்பூசி மாவட்டத்தில்  வருகின்ற 30.08.2024 ஆம் தேதி வரை மாவட்ட எல்லைப்புற கிராமங்களிலும், நோய்த் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வளர்க்கப்படும் பசுக்கள், காளைகள், வண்டி மாடுகள் மற்றும் நான்கு மாத வயதிற்கு மேற்பட்ட கன்றுகளுக்கு போடப்பட்டு வருகிறது. மேலும், இந்நோயானது பசுக்களையே குறிப்பாகத் தாக்குகிறது.  நோய்த் தாக்கம் ஏற்பட்ட பசுக்கள் அதிக காய்ச்சல், இரை உண்ணாது இருத்தல், தண்ணீர் மிகக் குறைவாக அருந்துதல் போன்ற அறிகுறிகளோடு மிகவும் சோர்வாக காணப்படும்.  நோய் கண்ட பசுக்களின் தோலின் மேல் சிறு கொப்புளங்கள் போல் வட்ட வடிவில் தடிப்புகளோ, புண்களோ ஏற்படும்.  மேலும், இந்நோய் கால்நடைகளைத் தாக்காத வண்ணம் கால்நடை வளர்ப்போர்கள் அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி தடுப்பூசி போட்டு தங்களது கால்நடைகளை பாதுகாத்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Similar News