கனவு இல்லம் திட்டத்தில் வீடு பயனாளிகளுக்கு ஆணை வழங்கல்

வழங்கல்

Update: 2024-08-10 04:50 GMT
கருணாநிதி கனவு இல்லம் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் 4200 புதிய வீடுகள் 147 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என அமைச்சர் பொன்முடி பேசினார். அரகண்டநல்லுாரில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பழனி முன்னிலை வகித்தார். அமைச்சர் பொன்முடி பயனாளிகளுக்கு ஆணை வழங்கி பேசுகையில், 'தமிழக முதல்வர் ஸ்டாலின் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் திட்டங்களை வகுத்து ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறார். குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் 147 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4200 புதிய வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முகையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு மட்டும் முதல் கட்டமாக 130 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது' என்றார். முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், முகையூர் ஊராட்சி தலைவர் தனலட்சுமி உமேஸ்வரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ரவிச்சந்திரன், அரகண்டநல்லுார் பேரூராட்சி சேர்மன் அன்பு, ஒன்றிய துணைச் சேர்மன் மணிவண்ணன், பி.டி.ஓ.,கள் ஜெகநாதன், சண்முகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

Similar News