கள்ளக்குறிச்சி நீதிமன்றங்களில் ஐகோர்ட் நீதிபதிகள் ஆய்வு

ஆய்வு

Update: 2024-08-10 07:26 GMT
கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஐகோர்ட் நீதிபதிகள் ஆய்வு செய்தனர். கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் அனைத்து நீதிமன்றங்களிலும் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், சவுந்தர் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் விபரம், வழக்கு விசாரணை ஆவணங்கள் வாதாடும் முறைகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினர். பின், கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்த தம்பதி சுரேஷ்-வடிவுக்கரசி தம்பதியின் பிள்ளைகள் கோகிலா, ஹரிஷ், ராகவன் ஆகியோரை நேரில் அழைத்து, அவர்களின் படிப்பு உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்த நீதிபதிகள், மூவருக்கும் சைக்கிள் மற்றும் புத்தாடைகளை வழங்கி மனம் தளராமல் படித்து முன்னேற அறிவுரை வழங்கினர். ஆய்வின் போது மாவட்ட நீதிபதி இருசன் பூங்குழலி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி ஸ்ரீராம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Similar News