ஸ்ரீ ஓம் ஆதிபராசக்தி கோவில்களில் கஞ்சி கலையம் மற்றும் பால்குடம் ஊர்வலம்

ஆடிப்பூரத்தை முன்னிட்டு எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட கவுண்டம்பட்டி மற்றும் நைனாம்பட்டியில்

Update: 2024-08-10 09:40 GMT
ஆடிப்பூரத்தை முன்னிட்டு எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட கவுண்டம்பட்டி ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் மற்றும் நைனாம்பட்டி ஸ்ரீ ஓம் ஆதிபராசக்தி கோவில்களில் கஞ்சி கலையம் மற்றும் பால்குடம் ஊர்வலம் நடைப்பெற்றது ... ஆடிப்பூரத்தை முன்னிட்டு எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட கவுண்டம்பட்டி ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலிலிருந்து பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்துக்கொண்டு கவுண்டம்பட்டியின் முக்கிய வீதிகளின் வழியாக பம்பை மேளம் முழங்க ஊர்வலமாக சென்று பின்னர் கோவிலை வந்தடைந்து மூலவர் பெரிய மாரியம்மன் சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து ஸ்ரீ பெரிய மாரியம்மன் சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.. இதேபோல நைனாம்பட்டி ஸ்ரீ ஓம் ஆதிபராசக்தி கோவிலிலிருந்து பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கஞ்சி கலயம் எடுத்துக்கொண்டு எடப்பாடியில் பிரசித்தி பெற்ற நஞ்சுண்டேஸ்வரர் கோவில் வரை சென்று எடப்பாடி பேருந்து நிலையம் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்து சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து ஸ்ரீ ஓம் ஆதிபராசக்தி சுவாமியை வழிபட்டு சென்றனர்.

Similar News