சாதனை மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது
உடற்பயிற்சி சார்ந்த போட்டியில் பங்கேற்று பரிசு பெற்ற மாணவரை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்;
ஐக்கிய உலக விளையாட்டு (UWSFF ) மற்றும் உடற்பயிற்சி கூட்டமைப்பு சார்பில் ,அண்மையில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற பல்வேறு உடற்பயிற்சி சார்ந்த போட்டிகளில் இந்தியா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர் . இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த குமாரபாளையம் ஆலங்காட்டு வலசு வீரர் ஜெயசூர்யா என்ற பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் முதல் பரிசை வென்றார்.. முதல் பரிசை வென்ற இவருக்கு தங்கப்பதக்கமும் சான்றிதழ்களும் ஐக்கிய நாடுகளை சேர்ந்த அமைப்பினர் வழங்கினர் .. மேலும் இந்த மாணவர் திருப்பூரில் உள்ள பள்ளியில் படிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது ..இந்த சாதனை மாணவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.