சங்ககிரி நகர பாமக சார்பில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

சங்ககிரி: பாமக சார்பில் சங்ககிரியில் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை....

Update: 2024-08-10 16:36 GMT
சேலம் மாவட்டம், சங்ககிரியிலிருந்து எடப்பாடி செல்லும் சந்தைபேட்டை பகுதியில் வேகத்தடை அமைக்க நகர பாமக சார்பில் மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் அலுவலகத்தில் மனு சங்ககிரி நகர பாமக செயலாளர் வி.டி.அய்யப்பன் சங்ககிரி உதவி பொறியாளரிடம் மனு அளித்துள்ளனர். சங்ககிரியிலிருந்து சந்தைப்பேட்டை வழியாக எடப்பாடி செல்லும் சாலையையொட்டி மீன் கடைகள், தேநீர்கடைகள், சார்பதிவாளர் அலுவலகம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சந்திப்பு, அரசு மருத்துவமனை செல்லும் சாலை பிரிவுகள் உள்ளது . இச்சாலையை தினசரி ஏராளமான பொதுமக்கள் கடந்து செல்கின்றனர். இவ்வழியே வரும் இரண்டு, மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், அரசு, தனியார் பேருந்துகள் வேகமாக கடந்து சென்று வருவதால் அன்றாடம் ஏதாவது ஒரு விபத்து நிகழ்ந்து வருகிறது. எனவே சந்தைப்பேட்டை நான்கு சாலைகள் பிரியும் இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டுமென அந்த மனைவி கூறியுள்ளார்.

Similar News